வாலாஜாபேட்டை கீழ்படவட்டம்மன் கோவில் தெருவில் கால்வாய் வசதி இல்லாததால் மழை நீரும், கழிவு நீரும் கலந்து வீடுகளுக்கு முன்பு குளம் போல் தேங்கி வருகிறது. பல நாட்களாக கழிவுநீர் தேங்கியிருப்பதால் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் நோய் தொற்று ஏற்படும் நிலை உள்ளது. உடனடியாக கழிவுநீரை அகற்றி, கால்வாய் வசதி ஏற்படுத்தித்தர வேண்டும்.