பாதாள சாக்கடை மூடி சேதம்

Update: 2023-10-08 16:55 GMT

திருவண்ணாமலை-திண்டிவனம் சாலையில் ரெயில்வே மேம்பாலம் உள்ளது. கிழக்கு போலீஸ் நிலையத்தின் வழியாக செல்லும் இந்த ரெயில்வே மேம்பாலத்தின் சர்வீஸ் சாலையில் ஒரு இடத்தில் பாதாள சாக்கடையின் மூடி உடைந்துள்ளது. இதனால் அவ்வழியாக நடந்து செல்பவர்கள் இந்த மூடி உடைந்த பகுதியில் கால்கள் சிக்கி தவறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி உள்ளனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு உடைந்த பாதாள சாக்கடையின் மூடியை சீரமைக்க வேண்டும்.

-சங்கர்கணேஷ், திருவண்ணாமலை.

மேலும் செய்திகள்