பாதாள சாக்கடை மூடிகள் சேதம்

Update: 2023-10-04 17:01 GMT

வேலூர் சத்துவாச்சாரி காந்திநகர் அருகே நேதாஜி நகரில் இருந்து கணபதி நகர் செல்லும் வழியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணியில் சிமெண்டு சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு பாதாள சாக்கடை மூடிகள் அருகருகே 2 இடங்களில் உடைந்து ஆபத்தான நிலையில் உள்ளன. விபரீதங்கள் நடக்கும் முன், பாதாள சாக்கடை மூடிகளை பாதுகாப்பாக மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-இளவரசன், வேலூர்.

மேலும் செய்திகள்