வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே கிரீன் சர்க்கிள் செல்லும் சர்வீஸ் சாலை ஓரம் கழிவுநீர் கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாயின் மேற்பகுதியில் சிமெண்டு சிலாப் மூலம் மூடப்பட்டுள்ளது. அவற்றின் ஒரு பகுதி உடைந்து ஆபத்தான நிலையில் பள்ளமாக உள்ளது. இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடைந்த சிமெண்டு சிலாப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாலன், வேலூர்.