கால்வாய் வசதி தேவை

Update: 2023-07-26 17:47 GMT

வாணியம்பாடி நியூ டவுன் பகுதியில் இஸ்லாமிய ஆண்கள் கல்லூரி, பெண்கள் கல்லூரி மற்றும் அரசு நகராட்சி உயர்நிலைப்பள்ளி, மருத்துவமனைகள் உள்ளன. இந்தப் பகுதியில் போதிய அளவு கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால் மழை பெய்யும் நேரத்தில் கல்லூரி சாலையில் மழைநீருடன், கழிவுநீரும் சேர்ந்து பெருக்கெடுத்து ஓடுகிறது. அந்த வழியாக வாகனங்களும், நடந்தும் செல்லவும் முடியவில்லை. எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும், நகராட்சி அதிகாரிகளும் உடனடியாக நடவடிக்கை எடுத்து கால்வாய் வசதி ஏற்படுத்தி தர ேவண்டும்.

-தங்கமணி, வாணியம்பாடி.

மேலும் செய்திகள்