வாலாஜா தேசிய நெடுஞ்சாலையில் பழைய தாலுகா அலுவலகம் அருகில் அம்மா உணவகம் உள்ளது. இதைச் சுற்றி கழிவுநீர் கால்வாய் சேதமாகி கழிவுநீர் பரவலாக தேங்கி நிற்கிறது. அந்தப் பகுதியில் கொசுக்கள் உற்பத்தி துர்நாற்றம் வீசுகிறது. அங்கு சாப்பிட வருவோர் சங்கடப்படுகின்றனர். வாலாஜா நகராட்சி அதிகாரிகள் சாக்கடை கால்வாயை சரி செய்ய வேண்டும்.
-சக்திவேல், வாலாஜா.