கால்வாய்கள் தூர்வாரப்படுமா?

Update: 2022-08-18 15:39 GMT

ஆற்காட்டில் உள்ள வேலூர் மெயின் ரோடு, பஜார் சாலை, அண்ணா சாலை ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பொதுப்பணித்துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். அப்போது கழிவுநீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டது. ஒரு சில இடங்களில் தூர்வாரினார்கள். மற்ற இடங்களில் அப்படியே விட்டுவிட்டார்கள். இதனால் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு மழைக்காலங்களில் கழிவுநீருடன் சேர்ந்த மழைநீர் சாலையில் வழிந்து ஓடுகிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கால்வாய்களை தூர்வாருவார்களா?

ராஜேஷ் ஆற்காடு

மேலும் செய்திகள்