தோண்டப்பட்ட பள்ளம் சரி செய்யப்படுமா?

Update: 2024-10-27 20:08 GMT

ஆரணி அரசு மருத்துவமனை எதிரே குடியிருப்புப் பகுதியில் கால்வாயில் அடைப்புகளை அகற்றுவதற்காக பள்ளம் தோண்டப்பட்டு 10 நாட்கள் ஆகிறது. அதை இன்னும் சரி செய்யாமல் வைத்துள்ளனர். இதனால் அரசு மருத்துவமனைக்கு வரக்கூடிய நோயாளிகள், அப்பகுதியில் வாகனங்களில் செல்லக்கூடிய பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தோண்டப்பட்ட கால்வாய் பள்ளத்தை சரி செய்வார்களா?

-சசிக்குமார், ஆரணி.

மேலும் செய்திகள்