செங்கம் டவுன் பழைய பஸ் நிலையத்தில் நெல், மணிலா போன்ற பொருட்களை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும் மண்டிகள் உள்பட பல கடைகள் செயல்பட்டு வருகின்றன. பழைய பஸ் நிலையத்துக்கு உள்ளே வந்து வெளியே செல்வதற்கு 2 வழிகள் உள்ளன. அதில் ஒரு வழியில் கால்வாய் மூடி உடைந்துள்ளதால் வாகனங்கள் உள்ளே செல்ல முடியாமல் ஒரே வழியில் சென்று வர வேண்டி உள்ளது. இதனால் விவசாயிகளுக்கும் சிரமமாக உள்ளது. உடைந்த கால்வாய் மூடியை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுந்தரராஜன், செங்கம்.