கால்வாயில் தேங்கும் கழிவுநீரால் துர்நாற்றம்

Update: 2022-08-27 09:35 GMT

வேலூர் ரங்காபுரம் பஸ் நிறுத்தம் அருகே சர்வீஸ் சாலையும், செங்காநத்தம் சாலையும் சந்திக்கும் இடத்தில் உள்ள கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு அடிக்கடி கழிவு நீர் சாலையில் வழிந்தோடி துர்நாற்றம் வீசுகிறது. இந்த வழியே கனரக வாகனங்கள் கருங்கல் ஜல்லி ஏற்றி கொண்டு அடிக்கடி செல்வதால் கால்வாயின் மேல் உள்ள சிமெண்டு சிலாப்புகள் உடைந்து கால்வாயில் அடைப்பு ஏற்படுகிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகளூம், பொதுமக்களும் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். கால்வாய் அடைப்பை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்