கிடப்பில் போடப்பட்ட திட்டம்

Update: 2024-10-13 20:38 GMT

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் நேரடியாக சந்தலிபுரம் ஏரியில் கலக்கிறது. இதனால், அங்கு நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுகிறது. கழிவுநீர் ஏரியில் கலப்பதை தடுக்க ரூ.15 கோடியில் மருத்துவக்கழிவுகள் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அந்தத் திட்டத்தை செயல்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராமராஜன், அடுக்கம்பாறை.

மேலும் செய்திகள்