வேலூரை அடுத்த ஜாப்ராப்பேட்டை ஊராட்சி மேல்வடுகன் குட்டை கிராமத்தில் வசிப்போர் தங்கள் வீடுகளில் இருந்து கழிவுநீரை தெருவில் மக்கள் நடக்கும் பாதையில் வெளியேற்றுகின்றனர். இதனால் கழிவுநீர் தெருக்களில் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து எங்கள் கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் கட்ட வேண்டும்.
-ராமசாமி, மேல்வடுகன்குட்டை.