வாணியம்பாடி நகராட்சி பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை செல்லும் சாலையில் மழை நீர் தேங்கி நிற்கிறது இதற்கு முறையான கால்வாய் அமைத்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்னேற வேண்டும். ஏனெனில் இப்பகுதியிலேயே பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரபிக் கல்லூரி உள்ளிட்டவை இருக்கின்றன. மேலும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மிகவும் சிரமப்பட்டு உள்ளே செல்லும் நிலை உள்ளது. எனவே உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன் வரவேண்டும்.
-அகமது பாஷா, வாணியம்பாடி.