திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பேரூராட்சியில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு என பல்வேறு பணிகளுக்காக தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். தற்போது இந்த பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி காணப்படுகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கழிவுநீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.