மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே கன்னியாகுடி ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் தங்கள் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களின் வசதிக்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுகாதார வளாகம் ஒன்று கட்டப்பட்டது. தற்போது இந்த சுகாதார வளாகம் போதிய பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்பட்டதால் அதை யாரும் பயன்படுத்தாமல் இருந்தனர். இதன் காரணமாக சுகாதார வளாகம் முழுவதும் செடி, கொடிகள் முளைத்து புதர்மண்டி காணப்படுகிறது. இதனால் அந்த பகுதிமக்கள் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சுகாதார வளாகத்தை சீரமைத்து மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்.