கால்வாயை தூர்வார வேண்டும்

Update: 2022-07-26 10:01 GMT

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தாலுகா முள்ளிப்பட்டு கண்ணகி நகரில் உள்ள கல்வாய்கள் தூர்வாரப்படாததால் தெருவில் கழிவுநீர் தேங்கி உள்ளது. இதன் அருகிலேயே சிறுமின்விசை குடிநீர் தொட்டி உள்ளது. இங்கு தண்ணீர் பிடிக்கவரும் பொதுமக்கள் இதனால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். மேலும் நோய் பரவும் நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கால்வாயை தூர்வாரி, கழிவுநீர் தேங்குவதை தடுக்க வேண்டும்.
-சந்திரசேகரன், முள்ளிப்பட்டு.

மேலும் செய்திகள்