பள்ளிக்கு புதிய கழிவறை கட்டவேண்டும்

Update: 2022-07-21 12:57 GMT
திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் வலங்கைமான் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் உள்ள கழிவறை தண்ணீர் வசதி இல்லாமலும்,உரிய பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால் மாணவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பள்ளிக்கு தண்ணீர் வசதியுடன் கூடிய புதிய கழிவறையை கட்டிதர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்