ஈரோடு பவானிரோடு பி.பி.அக்ரஹாரம் பூம்பூகார் நகரில் சாக்கடை கால்வாய் செல்கிறது. அங்கு பிளாஸ்டிக் கழிவு பொருட்கள், குப்பைகள் கிடப்பதால் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மழை பெய்யும்போது மழைநீருடன் கழிவுநீர் கலந்து வீதியில் செல்கிறது. இதனால் பொதுமக்களுக்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது. எனவே சாக்கடையில் உள்ள அடைப்பை சரிசெய்து, கழிவுநீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.