சென்னை அடையாறு கஸ்தூர்பா நகர் 5-வது மெயின் ரோட்டில் சாலையோரத்தில் வடிகால் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டது. இந்தநிலையில் பணி விரைந்து முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் இதுவரை பணி முடிந்தபாடில்லை. கிடப்பில் கிடக்கும் பணியால் பள்ளத்தில் கழிவுநீர் தேங்கி தெருவெங்கும் வீடுகளில் கொசு தொல்லை அதிகரித்து வருகிறது. சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் நிலையுள்ளதால், விரைவில் வடிகால் பணியை முடிக்க மாநகராட்சி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.