கழிவுநீர் கால்வாய் வசதி தேவை

Update: 2022-09-14 12:48 GMT

திட்டக்குடி நகராட்சி கூத்தப்பன்குடிக்காட்டில் சாலையில் ஓடும் கழிவுநீர் அந்த பகுதியில் உள்ள குடியிருப்புகளை சுற்றி தேங்கி நிற்கிறது. இதனால் கொசு தொல்லையும் அதிகாித்து வருகிறது. மேலும் பன்றிகள் இங்கு சுற்றித்திாிவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு  தொற்று  நோய் பரவும் அபாய நிலை நீடிக்கிறது. எனவே நகராட்சி நிர்வாகம் கழிவுநீரை வெளியேற்றுவதுடன் கால்வாய் வசதியையும்  செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்