நீடாமங்கலம் பேரூராட்சி பகுதிகளில் கழிவுநீருடன் மழைநீர் கலந்து குளம் போல் தேங்கி அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கடைவீதிக்கு வரும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. மேலும், தேங்கி கிடக்கும் நீரில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நீடாமங்கலம் பேரூராட்சி பகுதிகளில் கழிவுநீர் தேங்காமல் இருக்கவும், கொசு மருந்து அடிக்கவும் நடவடிக்கை எடுப்பார்களா?