மதுரை மாவட்டம் முனிச்சாலை இஸ்மாயில்புரம் 8-வது தெரு பகுதியில் பாதாள சாக்கடை நிரம்பி கழிவுநீர் வெளியேறி வருகிறது.சாலையில் பயணிக்க, நடக்க முடியாமல் பொதுமக்கள் அவதியடைகின்றனர். துர்நாற்றம் வீசுவதால் மூக்கை பிடித்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இதன் மூலம் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் வெளியேறுவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?