சென்னை கொருக்குப்பேட்டை அரங்கநாதபுரம், கண்ணன் தெரு பகுதியில் அரசு நடுநிலைப்பள்ளி ஒன்று உள்ளது. கண்ணன் தெருவில் கடந்த மாதம் மழைநீர் கால்வாய் பணி நடைபெற்றபோது அரசு பள்ளியின் கழிவுநீர், குடிநீர் குழாய்கள் உடைந்துவிட்டது. இது மறுசீரமைப்பு செய்யப்படவில்லை. சின்ன மழை பெய்தாலும் மழைநீரும், கழிவுநீரும் பள்ளியின் வகுப்பறைகளை சூழ்ந்து நிற்கிறது. மாநகராட்சி அதிகாரிகள் கவனித்து பள்ளிகளில் மழைநீர், கழிவுநீர் தேங்காதவாறு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.