திருச்சி சுந்தர் நகர், ரங்க நகர் பகுதிகளில் உள்ள கழிவுநீர் வடிகால் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு அதற்கான சரியான இடம் இல்லாத காரணத்தினால் தற்போது இந்த பகுதியில் உள்ள கழிவுநீர் அனைத்தும் பெரியார் மணியம்மை பள்ளிக்கு எதிரில் உள்ள ராணுவ மைதானத்தில் விடப்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதியில் அதிக அளவில் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் இந்த சாக்கடை நீரானது சாலையையொட்டி குழாய் அமைக்கப்பட்டு ராணுவ நிலத்திற்கு செல்கிறது. இந்த குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் பள்ளி அருகில் உள்ள சாலையில் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் பள்ளி மாணவ- மாணவிகள் சைக்கிளில் வரும்போது பெரும் சிரமத்தை சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.