வெள்ளித்திருப்பூர் அருகே பொம்மன்பட்டியில் குடிநீர் மேல்நிலைத் தொட்டி உள்ளது. இதன் கீழ் குப்பை தொட்டி வைக்கப்பட்டுள்ளது. மேல்நிலைத் தொட்டியில் இருந்து தண்ணீர் வெளியேறும் போது குப்பைத்தொட்டியில் படுகிறது. இதனால் குப்பைகளில் இருந்து துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி குப்பைத் தொட்டியை வேறு இடத்துக்கு மாற்றி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.