விருத்தாசலம் நகரில் பல இடங்களில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாமல் தூர்ந்து போய் காணப்படுகிறது. இதனால் கழிவுநீர் வடிந்து செல்ல வழியின்றி குடியிருப்பு பகுதியிலேயே தேங்கி நிற்கிறது. இதில் அதிகளவு கொசுக்கள் உற்பத்தியாகியுள்ளதால், இரவில் பொதுமக்கள் கொசுத்தொல்லையால் தூங்க முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே கழிவுநீர் கால்வாயை முறையாக தூர்வாரி பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.