கடலூர் பஸ் நிலையத்தில் சென்னைக்கு செல்லும் பஸ்கள் நிற்கும் இடத்தில் கால்வாய் அடைப்பால் கழிவுநீர் வெளியேறி தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, துர்நாற்றம் வீசுவதால் மாநகராட்சி பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு பலவித நோய் பரவும் அபாயம் உள்ளது. இதை தவிா்க்க கழவுநீரை அப்புறப்படுத்துவதோடு, கால்வாய் அடைப்பை சரி செய்ய மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.