மதுரை கிழக்கு மண்டலம் 12-வதுவாா்டு காந்திபுரம் பகுதியில் பாதாள சாக்கடை கழிவு நீரானது சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் இந்த பகுதியில் கொசுக்கள் உருவாகி டெங்கு, மலேரியா போன்ற நோய்களும் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே இந்த பாதாள சாக்கடையை அடைப்பை சீரமைக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.