ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சியில் பொதுமக்கள் அதிக அளவில் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் இப்பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாரபடுவதில்லை. இதனால் கழிவுநீரானது தேங்கி நிற்கிறது. தேங்கி நிற்கும் கழிவுநீரில் இருந்து கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி வருகிறது. கொசுக்கடியால் பொதுமக்கள் டெங்கு, மலேரியா போன்ற தொற்றுநோய்களால் பாதிக்கப்படுகிறார்கள். சுகாதார சீர்கேடு அடைந்துள்ள இப்பகுதியில் கழிவுநீர் கால்வாயை தூர்வார சம்பந்தபட்ட அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.