கடலூர் மஞ்சக்குப்பம் புனித வளனார் கல்லூரியில் இருந்து வேணுகோபால் புரம் அரசு பெண்கள் பள்ளிக்கு செல்லும் சாலையோர கால்வாயில் குப்பைகள் அடைத்து கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது.ஆகவே குப்பைகளை அகற்றி கழிவுநீர் செல்ல மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.