குடிநீருடன் கழிவுநீர் கலப்பு

Update: 2022-08-07 14:35 GMT

சின்னத்தம்பிபாளையம் ஊராட்சி புதுமேட்டூர் பஸ் நிறுத்தம் அருகில் சாக்கடை வடிகால் கட்டப்பட்டு உள்ளது. இந்த சாக்கடை வடிகாலில் செல்லும் கழிவுநீரானது அங்குள்ள குடிநீர் குழாய் மீது விழுகிறது. இதனால் குடிநீருடன் கழிவுநீர் கலந்து நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. மேலும் கழிவுநீரானது ரோட்டிலும் பாய்ந்து செல்கிறது. இதனால் நடமாட முடியாத அளவுக்கு ரோடு சேறும், சகதியுமாக காணப்படுகிறது. எனவே சாக்கடை கழிவுநீர் முறையாக செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்