தொற்று நோய்கள் பரவும் அபாயம்

Update: 2022-08-07 13:14 GMT
மயிலாடுதுறை பகுதி திருவிழந்தூர் கண்காணிமுட்டம் செல்லும் சாலையில் பிள்ளையார் கோவில் தெரு உள்ளது. இந்த பகுதியில் உள்ள பாதாள சாக்கடை குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையோரத்தில் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. அதுமட்டுமின்றி கழிவுநீரால் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகிறது. கொசுத்தொல்லையும் அதிகரித்து வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் தேங்கி கிடக்கும் கழிவுநீரை அகற்றவும், பாதாள சாக்கடை குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறாமல் இருக்கவும் நடவடிக்கை எடுப்பார்களா?





மேலும் செய்திகள்