நெல்லை மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலம் 31-வது வார்டு குறிச்சி பிள்ளையார் கோவில் தெருவில் நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட உள்ளது. இதற்கான குடிநீர் குழாய்கள், அங்குள்ள கழிவுநீர் வாறுகாலில் வெகு நாட்களாக கிடக்கிறது. இதனால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் அடைப்பு ஏற்பட்டு தேங்கி கிடக்கிறது. எனவே குடிநீர் குழாய்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி, சுத்தமான இடத்தில் வைப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.