கழிவுநீரால் வாகன ஓட்டிகள் அவதி

Update: 2022-08-06 14:22 GMT

ஓசூரை அடுத்த பேரண்டப்பள்ளி ஊராட்சி பத்தலப்பள்ளி மார்க்கெட் பின்புறம் பாஸ்கர் தாஸ் நகரில் இருந்து முனீஸ்வரர் நகர் செல்லும் வழியில் சாலையின் இருபுறமும் குழி தோண்டப்பட்டு, பெரிய பாறாங்கற்கள் சாலையிலே போட்டு வைத்துள்ளனர். இதனால் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் வெளியேறி ஓடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், நடந்து செல்பவர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இதை தடுக்க அதிகாரிகள் முன்வருவார்களா?

-கிருஷ்ணமூர்த்தி, பத்தலப்பள்ளி மார்க்கெட், ஓசூர்.

மேலும் செய்திகள்