காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத், நாயகன் பேட்டை கிராமத்தில் உள்ள ஒத்தவாடை தெருவில் கழிவுநீர் தேங்கி உள்ளது. பக்கத்து தெருவிற்கு செல்ல வேண்டும் என்றால் கூட இந்த கழிவுநீரை கடந்து தான் செல்லவேண்டியுள்ளது. நீண்ட நாட்களாக தேங்கியிருக்கும் கழிவுநீரில் விஷப்பூச்சிகளும் குடியிருக்கின்றன. எனவே தேங்கியிருக்கும் கழிவுநீரை உடனடியாக அகற்றவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.