சென்னை அயனாவரம் , சோமசுந்தரம் தேவர் முதல் தெருவில் உள்ள பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் கசிந்து சாலை முழுவதும் நிரம்பி உள்ளது. மேலும் துர்நாற்றம் வீசி வருவதோடு இந்த பகுதியே அசுத்தமாக காட்சி தருகிறது. எனவே நோய் தொற்று ஏற்படும் முன்பு தேங்கியிருக்கும் கழிவுநீரை அகற்றவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்