சிவகங்கை மாவட்டம் வாணியங்குடி பஞ்சாயத்து அலுவலகம் - அம்பேத்கர் சிலை செல்லும் சாலையில் குடிநீர் குழாய் அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த குழாய் அருகே செல்லும் கழிவுநீர் கால்வாயில் சாக்கடை நிரம்பி கழிவுநீரானது தேங்கி நிற்கிறது. இதனால் குடிநீர் எடுக்க வரும் பொதுமக்கள் தேங்கிய கழிவுநீரால் ஏற்படும் துர்நாற்றம் காரணமாக சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் குழாய் அமைந்துள்ள இடத்தில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்