கடலூர் ஆல்பேட்டை செல்லும் சாலையோரம் உள்ள வடிகால் வாய்க்கால் இருக்கும் இடமே தெரியாமல் முற்றிலும் தூர்ந்து போய் காணப்படுகிறது. அதில் கழிவுநீர் செல்ல வழி இன்றி தேங்கி நிற்கிறது. மேலும் சாலைகளிலும் வழிந்தோடுகிறது. அதனால் வடிகாலை தூர்வாரி சீரமைப்பதுடன், தடையின்றி கழிவுநீர் வழிந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.