பஸ் நிறுத்தத்தில் பராமரிப்பில்லாத கழிவறை

Update: 2022-07-31 12:23 GMT
நன்னிலம் தாலுகா பேரளம் பேரூராட்சியில் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தில் பயணிகளின் வசதிக்காக கட்டண கழிவறை கட்டப்பட்டு இருந்தது. இந்த கழிவறை போதிய பராமரிப்பின்றி காட்சி அளிக்கிறது. மேலும் தண்ணீர் வசதி இல்லாததால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் இந்த கழிவறையை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர் .எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பஸ் நிறுத்தத்தில் உள்ள கழிவறையை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்