மன்னார்குடி கோபிரளயம் பகுதி 6- நம்பர் வாய்க்கால் மேற்கு சாலை பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி காணப்படுகிறது. இதனால் சாலையில் செல்ல முடியாமல் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிள்களில் வருவோர் பள்ளங்கள் இருப்பது தெரியாமல் அடிக்கடி விபத்துகளில் சிக்கி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.