கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பஸ் நிலையம் அருகே ஆட்டோ நிறுத்தும் இடத்தின் அருகில் உள்ள சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது. தற்போது அந்த பள்ளங்களில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. ஆகவே தேங்கி நிற்கும் கழிவு நீரை அகற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.