மயிலாடுதுறை-பூம்புகார் சாலையில் வட்டார போக்குவரத்து அலுவலகம் எதிரில் அய்யங்குட்டை உள்ளது. இந்த குட்டையில் அந்த பகுதியில் இருந்து வரும் கழிவுநீர் கலந்து விடுகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் கொசுக்களும் உற்பத்தியாகின்றன. இதனால் அந்த பகுதி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அய்யங்குட்டையில் கழிவுநீர் கலக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாகும்.