சாக்கடை கால்வாய் தூர்வார வேண்டும்

Update: 2022-07-27 11:36 GMT
கிருஷ்ணகிரி நகர் பகுதியில் பெங்களூரு சாலை, சேலம் சாலை, சப்ஜெயில் சாலை என பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகள் வணிக நிறுவனங்களும் உள்ளன .இந்தப் பகுதிகளில் சாக்கடை கால்வாய் தூர்வாரப்பட்டதால் மழைநீர்  செல்கிறது . அதேநேரத்தில் சென்னை சாலையில் சாக்கடை கால்வாய் தூர்வாரப்படவில்லை . அந்த சாலையில் சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மேலும் மழைக்காலங்களில் மழைநீர் செல்ல வழியில்லாமல் துர்நாற்றம் வீசுகிறது. எனவே கிருஷ்ணகிரி நகரில் சென்னை சாலையில் சாக்கடை கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் .

-நூருல்லா, கிருஷ்ணகிரி

மேலும் செய்திகள்