திட்டக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வகுப்பறைக்கு பின்புறம் கழிவு நீர் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு மாணவர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே தேங்கி நிற்கும் கழிவு நீரை அகற்றி அங்கு சுகாதார பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.