மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதி பார்க் ரோட்டில் கிராம கூட்டுறவு வங்கி உள்ளது. இதன் அருகே சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் வடிகால் திறந்த நிலையில் உள்ளது. இதனால் வடிகாலுக்குள் குப்பைகள் தேங்கி கழிவுநீர் சாக்கடையாய் மாறுகின்றன. இதன்காரணமாக அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசிகிறது. மேலும், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் சூழல் உருவாகி உள்ளது. அதுமட்டுமின்றி திறந்த நிலையில் கழிவுநீர் வடிகால் உள்ளதால் இரவு நேரங்களில் வாகனங்களில் வருபவர்கள் நிலைதடுமாறி வடிகாலுக்குள் விழுந்துவிடுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் திறந்த நிலையில் உள்ள கழிவூநீர் வடிகாலின் மேற்பகுதியை மூடிகொண்டு மூட நடவடிக்கை எடுப்பார்களா?