அரியலூர் பெரியார் நகர் முதல் தெரு கிழக்குப்பகுதியில் உள்ள சாக்கடையில் பதிக்கப்பட்டுள்ள கழிவுநீர் குழாய் அளவு சிறியதாக உள்ளதால் மழைக்காலங்களில் மழைநீரும், கழிவுநீரும் கலந்து அதிக அளவில் ஓடுவதினால், இந்த குழாயில் செல்ல முடியாமல் சாலையில் சென்று தாழ்வான பகுதிகளில் தேங்கி நிற்கிறது. இவற்றில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதியில் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.