பெருந்துறை-ஈரோடு ரோட்டில் உள்ள செட்டிதோப்பு வளைவு பகுதி மிகவும் தாழ்வானதாகும். இந்த பகுதியில் ரோட்டின் இருபுறமும் வடிகால் வசதி இல்லை. மேலும் இந்த தாழ்வான ரோட்டு பகுதியை சுற்றிலும் உள்ள நிலங்கள் அனைத்தும் மேடாக உள்ளது. இதனால் மழை நின்று ஒரு வாரம் ஆன பிறகும் வடிகால் வசதி இல்லாததால் மழைநீர் ரோட்டை விட்டு வெளியேற வழியில்லாமல் செட்டித்தோப்பு பகுதியிலேயே குளம் போல் தேங்கி நிற்கிறது. உடனே ரோட்டில் தேங்கி நிற்கும் மழைநீர் செல்ல வடிகால் வசதி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.