தொற்றுநோய் பரவும் அபாயம்

Update: 2022-07-25 17:10 GMT

மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கச்சிராயம்பட்டி பஞ்சாயத்திற்குட்பட்ட பால்குடி கிராமத்தில் கழிவுநீர் செல்ல வாருகால் அமைக்கப்பட்டது. தற்போது இந்த வாருகாலில் கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கின்றது. மேலும் தேங்கிய கழிவுநீர் வீட்டிற்குள் புகுந்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துவதோடு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் வீட்டில் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே வாருகாலில் கழிவுநீர் தேங்காதவாறு சீரமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்