தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே அத்திமுட்லு கிராமத்தில் நீண்ட நாட்களாக குடிநீர் தொட்டியை சுற்றி கழிவுநீர் தேங்கி நிற்கிறது. அங்கு துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார கேடும் ஏற்படுகிறது. இதனால் அங்கு தண்ணீர் பிடிக்க வரும் பொதுமக்கள் முகம் சுளிக்கின்றனர். எனவே இந்த கழிவுநீரை அகற்றி குடிநீர் தொட்டியை சுற்றி சுத்தம் செய்து சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-சிவக்குமார், அத்திமூட்லு, தர்மபுரி.