தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே தொட்டபடகாண்ட அள்ளி கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால் கழிவுநீர் திறந்த வெளியில் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை சுத்தம் செய்து கழிவுநீர் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தமிழ், பாலக்கோடு, தர்மபுரி.